தூக்கம் காக்கும் 10 வழிகள்!!!!!!
34064
12
702
|   May 09, 2017
தூக்கம் காக்கும் 10 வழிகள்!!!!!!

ஆரோக்கியமான தூக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது ஒருவரது வாழ்க்கைத் தரத்தையே மேம்படுத்தும். ஆனால், இன்று லட்சக்கணக்கான இந்தியர்கள் தூக்கத்தை தொலைத்த வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். நல்லவேலையாக, ஆரோக்கியமான தூக்கத்துக்கான பல வழிமுறைகள் உள்ளன....

10 எளய வழிமுறைகள்

 1. எலெக்ட்ரானிக் சாதனங்களை தவிர்க்கவும்                       எலெக்ட்ரானிக் திரைகளிலிருந்து வெளியேறும் நீீலவண்ண ஒளி உங்கள் தூக்கத்தை பாதிக்கு இயல்புடையது.எனவே,தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னனரே டிி.வி,கம்ப்யூட்டர்,லேப்டாப்,செல்போனை அணைத்துவிட வேண்டும்.

2. மிதமான உணவு                                 இரவில் மிதமான,  எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவுக்குப்பின் காபி,டீ, சாக்லேட் அறவே வேண்டாம்.  இவற்றிள் உள்ள caffeine தூக்கத்தை விரட்டும், மூளையை பாதிக்கும்.

  3. உடற்பயிற்சி                                              உடற்பயிற்சி செய்யும்போது     உடல் முழுவதும் சோர்வு அடையும் அது  நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கும்.

4. பகல் தூக்கத்துக்கு பை (bye)               பகலில் சாப்பிட்ட பிறகு 20 நிமிடம் தூங்கலாம். ஆனால்,    நீண்ட நேரம்  தூங்கக் கூடாது.  பகலில் தூக்கம்  வரும்பபோது முடிிந்தால் சிறிய நடை செல்லுங்கள்;  ஒரு டம்ளர்   தண்ணீர் பருகுங்கள்; புத்தகம் படிங்க;  உங்களுக்கு பிடித்தவர்களுக்கு  போன் செய்து பேசுங்கள். பகலில் தூக்கத்தை   தவிர்தாலே இரவில் நல்ல தூக்கம் வரும்.

5. தலையணை                                            அதிக தடிமன் உள்ள தலையணையும் வேண்டாம்,   மிகவும் மென்மையான தலையணையும் வேண்டாம். மிதமான தடிமன் உள்ள, பருத்தியாலான தலையணையை தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும்.  தலையணை உறையை அடிக்கடி  மாற்றுங்கள். படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.

6. படுக்கை தூங்க மட்டுமே                         படுக்கை என்பது தூங்க மட்டுமே என்கிற  கொள்கையை பின்பற்றுங்கள். படுக்கையில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை     பார்ப்பது, படிப்பது,  டி.வி பார்ப்பது  ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

7.புகையும் மதுவும்                            மதுவால் ஆழமான தூக்கத்தைக் கொடுக்க முடியாது. மேலும் புகையும்ம துவும் நரம்பு மண்டலத்தைப் பாதித்து ஆரோக்கியத்தைக் கெடுக்கும். மதுவின்போதையில் மயங்கிக்கிடப்பது தூக்கம் அல்ல. புகையும் மதுவும் தூக்கத்தை மட்டும் அல்ல உடல் நலத்தையே அழிக்கும் தீய பழக்கங்கள்.

8.உடலின் கடிகாரம் (Biological clock)                                              உடலின் கடிகாரத்தைச் சீராக்குங்கள். சாப்பிடுவது, படுக்கைக்குச் செல்வது,எழுவது என அனைத்தையும் அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தில்செய்வதை வழக்கமாக்குகள்.நேரத்திலேயே உறங்கி நேரத்திலேயே எழும் 

9.வலி நிவாரணம்                             தூக்கம் கெட முக்கியக் காரணம் முதுகு வலி, முதுகு வலி உள்ளவர்கள் கால்களுக்கிடையே தலையணை வைத்து தூங்கலாம். முதுகுவலியால் தூக்கம் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.

10. முக்கியமாக செய்ய வேண்டியவை                                 கழுத்தை சரியான           நிலையில்வைத்துத் தூங்க வேண்டியது அவசியம். படுத்துக்கொண்டு டி.வி பார்க்கக் கூடாது. கழுத்து வலி ஏற்படக்கூடும். முடிந்தவரை படுக்கை அறையில் தொலைக்காட்ச்சிப் பெட்டியை வைக்க வேண்டாம்..   

          மேல கூறிய விஷயங்களை கடைப்பிடித்து வந்தால் நல்ல, நிம்மதியான தூக்கம் வரும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

      எனக்கு தெரிந்த, நான் படித்த விஷயங்களை இந்த பதிவில் பகிர்ந்துள்ளேன்....கருத்துகள் திருத்தங்கள் வரவேற்கப்படுகின்றன.

Read More

This article was posted in the below categories. Follow them to read similar posts.
LEAVE A COMMENT
Enter Your Email Address to Receive our Most Popular Blog of the Day