தெரிந்த திருநாள் தெரியாத கதை ஒன்று!!!!
864
5
|   May 12, 2017
தெரிந்த திருநாள் தெரியாத கதை ஒன்று!!!!

"ஆருத்ரா தரிசனம் "  என்பது சிவபெருமானுக்கு உகந்த ஒரு விசேஷமான  நாளாகும். இத்திருநாளை நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெகு விமரிசையாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

      ஆனால் நம்மில் பலருக்கு ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன, அதன் சிறப்பென்ன, இந்நாளை ஏன் அனுஷ்டிக்கின்றோம் என்று தெரியவில்லை...(infact எனக்கும் காரணம் தெரியாமல் தான் இருந்தது, தெரிந்து கொள்ள நான் பெரிய அளவில் எந்த முயற்சியும் செய்ததில்லை). ஆருத்ரா தரிசனத்தன்று சிவன் கோவிலுக்கு சென்று வழக்கம் போல் ஒரு அர்ச்சனை செய்து விட்டு சிவனை தரிசித்து விட்டு வந்துவிடுவேன், இது நான் கடைப்பிடித்து வந்த வழக்கம்.

       ஒரு  நாள் அப்பா ஆருத்ரான்னு அம்மா ஏதோ சொன்னாங்க அப்படினா என்ன பா,எல்லோரும் என்ன செய்வாங்க? என்று தனக்கே உரிய மலழை மொழியில் என் மகள் (3.5 வயது) தன் தந்தையிடம் வினவ அவரோ என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் என்னை வம்பில் மாட்டி விடுகிறாயே என்கிற தோரணையில் என்னை நோக்கினார் (இச்சம்பவமே இத்திருநாள் பற்றிய காரணத்தை அறிந்து கொள்ள தூண்டுகோளாக அமைந்தது).

ஆருத்ரா தரிசனம்
        இத்தினம் தோன்ற அடித்தளமாய்  அமைந்த சம்பவத்தை எனக்கு தெரிந்த வகையில் விளக்கியுள்ளேன், தெடர்ந்தது இப்பதிவை வாசியுங்கள். சிவபெருமானைை   நிந்தித்து தாருகாவனத்து முனிவர்கள் வேள்வி ஒன்றை நடத்தினார்களாம். பிச்சாடனர் வேடம்  பூண்டு (ஆஷி தோஷி- விரைவில் மனம் உருகக்கூடிியவன்- சிவன்) முனிவர்களின் பர்ணசாலைக்குச் சென்றாராம்........முனி பத்தினிகள் சிவன்பால் ஈர்க்கப்பட்டு, அவர் பின்னரே சென்றனராம். முனிவர்கள் வேள்வியில் இருந்து பெறப்பட்ட மதயானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு ஆகியவற்றை ஏவி சிவனை கொல்ல முயன்றனர். 

     ஈசனோ யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்திக்கொண்டாராம். முயலகன் என்ற அந்த அசுரன் மீது வலது காலை ஊன்றி, இடது காலை தூக்கி பரதம் ஆடினாராம்!!!!!!! ஈசனின் அருட்பெருமையை தாருகாவனத்து முனிவர்கள் உணர்ந்தனர். நடராஜப் பெருமானின் இந்த ஆடலே "ஆருத்ரா தரிசனம்".

      ஆருத்ரா களி

      ஆண்டுக்கு ஒருமுறை வரும் அன்றைய தினத்தில்தான் "களி" என்ற உணவை நிவேதனம் செய்ய, நடராஜப்பெருமான் களிப்பார் என்பது ஐதீகம்.

       நம்மை பல சந்தர்பங்களில் முகம் சுளிக்க வைத்த இந்த களியை ஈசன் உண்டாரா என்கிற கேள்வி நம் அனைவரது மனங்களிலும் எழுவது சகஜம்தான் (அது இயற்கை நியதி). ஆம் நடராஜர் களி உணடார் என்பதே நான் படித்து கேட்டறிந்து தெரிந்துக்கொண்ட விஷயம் (இதை ஆராய முற்பட்டால் விளைவுகள் என்னவாக இருக்குமென்று யாம் அறியோம் பராபரமே!!!!!)

  சரி ஈசன் களியை உண்ட கதையை தெரிந்து கொள்ள என்னோடு தொடர்ந்து பயனியுங்கள்.....

    சேந்தனார் ஒரு சிவ பக்தர், அவர் விறகு வெட்டி விற்று பிழைப்பு நடத்தி வந்தார். அவர் தினமும் ஓரு சிவனடியாருக்கு உணவளித்த பின்னரே தான் உணவருந்துவார். இதை அவர் தன் பழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அன்றைய தினம் மழை பெய்ததால் விறகு விற்க முடியாமல் வியாபாரம் தடை பட்டு போனது, சிவனடியார்க்கு உணவளிக்க வேண்டும் ஆனால் சேந்தனார் கையில் அரிசி வாங்க பணம் இல்லை!!!!!!(சத்திய சோதனை).......

         சேந்தனார் என்ன செய்திருப்பார்???? சிவனடியார்க்கு உணவளித்தாரா? சிவ பக்தனின் பழக்கம் என்னவாயிற்று???????ஆஷி தோஷி என்ன திருவிளையாடல் புரிந்தார்??????? தெரிந்துக் கொள்ள keep waiting... Will be back soon 😉😉😉😉😉😉😉

 

Read More

This article was posted in the below categories. Follow them to read similar posts.
LEAVE A COMMENT
Enter Your Email Address to Receive our Most Popular Blog of the Day