En Samayalaraiyil - Part 2
951
|   Jun 14, 2017
En Samayalaraiyil   - Part 2

பூரிக்கு உருளை மசால். ..!

தேவையான பொருட்கள். ..:

உருளை கிழங்கு - 5 பெரியது

வெங்காயம் - 3 பெரியது

பச்சை மிளகாய். ...- 5

சாம்பார் பொடி - 1 ஸ்பூன்

கரம் மசாலா பொடி - 1 / 2 ஸ்பூன்

கடுகு, உளுந்து, க . பருப்பு - தாளிக்க

தேவையான அளவு உப்பு, சிறிது எண்ணெய் .

மஞ்சள் தூள் - 1 / 4 ஸ்பூன்

செய்யும் முறை. ..

உருளைக் கிழங்கை குக்கரில் நன்றாய் வேகவைத்து பின், தோலை உறித்து நன்றாய் நசுக்கி வைத்துக் கொள்ளவும். .

வெங்காயம், மற்றும் பச்சை மிளகாயை நன்றாய் பொடிப் பொடியாய் நறுக்கி வைத்துக் கொள்ளவும். ..

வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து கடுகு, உளுந்து, க.பருப்பு இவற்றை வறுத்து பின், நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாயை அதில் போட்டு தேவையான உப்பு சேர்த்து கிளறவும். .. சிவக்க வறுக்கவும். .. சாம்பார் பொடியை போட்டு நன்றாய் வதக்கி தண்ணீர் விடவும். ..5 முதல் 1௦ நிமிடங்கள் கொதித்தப் பின் நசுக்கி வைத்த உருளைக்கிழங்கை அதில் போட்டு மேலும் தண்ணீர் விட்டு நன்றாய் கொதிக்க விடவும். .. மஞ்சள் பொடி சேர்க்கவும். ..தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கலாம். .. ரொம்பவும் கெட்டியாக வேண்டாம். .. கொஞ்சம் கிளறி விடவும். 10 நிமிடங்கள் நன்றாய் கொதித்தபின் இறக்கும் முன் மசாலா பொடி சேர்த்து இறக்கவும். ..

சூடான பூரியுடன் மசால் அருமையாக இருக்கும். ..

மைதிலி ராம்ஜி

************************************************************************************

தவலை   அடை ..!

தேவையான பொருட்கள். ..

அரிசி - 1 கப்

து. பருப்பு - 2 கப்

க . பருப்பு - 1 கப்

சீரகம் - 1 டீ .ஸ்பூன்

மிளகு - 1 டீ .ஸ்பூன்

மிளகாய் - 2

பெருங்காயம் - 2 கிள்ளு

தேங்காய் துறுவல் - 1 கப்

தேவையான உப்பு

எண்ணெய்

வெங்கலப் பானை.

செய்யும் முறை :

அரிசி, து. பருப்பு, க.பருப்பு, சீரகம், மிளகு, மிளகாய் இவற்றை மிக்ஸியில் அல்லது மெஷினில் பொடியாக இல்லாமல் கொஞ்சம் நர நர என்று அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்கலப் பானையை அடுப்பில் வைத்து கொஞ்சம் எண்ணெய் விட்டு சற்று சுழற்றி விடவும். .சிம்மில் வைக்கவும். ..

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு ஜலம் விட்டு கொதிக்க விடவும். .. தேவையான அளவு உப்பு சேர்க்கவும். .. நன்றாய் கொதித்த பிறகு அதில் தேங்காய் துருவல் மற்றும் பெருங்காயத்தை சேர்த்து ஒரு கிளறு கிளறவும். பின்பு, அரைத்து வைத்த பொடியினை இதில் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாய் கிளறி 1௦ நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும். .. அடை தட்டும் பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். .. பாதி வென்றிருக்கும். .

சற்று ஆறிய பிறகு , உருண்டை எடுத்து ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் அடைபோல் தட்டி அதில் 4 ஓட்டை போடவும். .. அதனை வெங்களப் பானையில் இட்டு சுற்றி எண்ணெய் விடவும். .. இது போல் 3 அல்லது 4 அடை அதில் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாய் இட்டு அதன் மேல் எண்ணெய் தாராளமாக விடவும். .. பானையை லேசாய் மூடிவைக்கவும். 6 நிமிடங்கள் கழித்து அடைகளை மெதுவாக சற்று சுழற்றவும். .. திரும்பவும் 4 நிமிடங்கள் மூடி வைத்தப்பின் திறந்து கிரண்டியால் மெதுவாக ஒவ்வொன்றாய் எடுக்கவும். .. ஒரு பக்கம் பொன் முறுவலாகவும் , மற்றொரு பக்கம் மிருதுவாகவும் இருக்கும். ..

சுவையோ சுவை. .

மைதிலி ராம்ஜி

Read More

This article was posted in the below categories. Follow them to read similar posts.
LEAVE A COMMENT
Enter Your Email Address to Receive our Most Popular Blog of the Day