எதார்த்த வாழ்க்கை
655
8
|   May 11, 2017
எதார்த்த வாழ்க்கை

 

"ஆகாஷ் !! உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.... மேலே மேலே நீங்கள் வளர என் வாழ்த்துக்கள்...." பரந்தாமன் வாழ்த்தியது உண்மையல்ல.... வெறுப்பு..! தனக்கு வர வேண்டிய பதிவி உயர்வை ஆகாஷிற்கு கொடுத்துள்ளார் மேலதிகாரி.....  முற்றிலும் பொறாமை.. ! 

ஆகாஷ்.... வயது 28.... கட்டுக்கோப்பான உடல் வாகு... யாரையும் மரியாதைக் குறைவாய் பேசாத பண்பு... எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் உத்தியோகத்தில் முழு கவனமும் செலுத்தம் உண்மை உழைப்பாளி.... ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன்.... நன்றாய் படித்து சலுகையில் உயர் படிப்பும் முடித்து இதோ இந்த பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கிறான்... 

இவனது அப்பா இவனுக்கு 9 வயதிருக்கும் பொழுதே இறந்துவிட்டார்.. இவனையும் இவன் தம்பியையும் கஷ்டத்தில் வளர்த்தாள் அம்மா... அதனால், இவன் சிறுவயதில் இருந்தே குடும்ப பொறுப்பை உணர்ந்தவன்.... தன் அம்மா பட்ட துன்பத்தையும் நன்கு அறிந்தவன்.... தன் சொந்த முயற்சியால் பல தடைகளை மீறி இன்று பதவி உயர்வு பெற்றுள்ளான்.... பொறாமைகள் எத்தனை ? கேலிப் பேச்சுக்கள்...எதையும் இவன் கண்டு கொள்ளவில்லை .... "மற்றவர் ஏளனப் பேச்சிற்கு நாம் செவி மடித்தால் நாம் வாழ்வில் முன்னேறும் வாய்ப்பை துறந்துவிடுவோம் " இதை அம்மா அடிக்கடி சொல்லி இருக்கிறாள்... அதன் பொருள் இன்று நன்கு புரிந்தது... கிட்டத்தட்ட , 15 பெயர்கள் இந்த பதவி உயர்விற்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தன.... அவற்றில் இவன்தான் வயதிலும், அனுபவத்திலும் இளையவன்.... இருப்பினும் இவனது திறமை மற்றும் செயல் திட்டங்கள் வைத்து இவனது பெயர் முன் வைக்கப்பட்டது.... பலரது பொறாமைக்கும் , வெறுப்பிற்கும் இன்று ஆளாகி உள்ளான்... எதைப் பற்றியும் இவன் கவலைப் படவில்லை... இதோ வெற்றி நடை போடுகிறான் ... "

ஆகாஷ்..! நீ நல்லா இருக்கணும்.... உன் நம்பிக்கையை என்னிக்கும் கைவிடாதே... " அம்மா ஆசீர்வதித்தாள்.. 

6 மாதங்கள் கழித்து ஒரு நாள்... " சுமதி... என்ன ஆகாஷிற்கு என் பெண்ணை கல்யாணம் செய்ய சம்மதம் தானே? " அண்ணன் வீட்டிற்கு வந்திருந்தார்.... " ஆகாஷிடம் பேசிட்டு நான் சொல்றேன் அண்ணா.." பவ்யமாய் பதில் கொடுத்தாள்... 

உண்மையில், சுமதிக்கு கொஞ்சமும் இஷ்டம் இல்லை.... பழைய நினைவுகள் மனதில் அப்படியே பதிந்து இருந்தன... இவள் கணவனை இழந்து தனிமரமாய் குழந்தைகளோடு கண் கலங்கி நின்ற பொழுது இதே அண்ணன் " இதோ பாரு சுமதி.... நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு அப்பாவோட சேர்ந்து உனக்கு கல்யாணம் செய்து கொடுத்தாச்சு.... அந்தக் கடனே இன்னும் தீர்ந்தபாடில்லை.... எனக்கும் இதோ இரட்டைப் பெண் குழந்தைகள்.... எனக்கு அதுகளை வளர்க கடமை இருக்கு... என் குடும்பத்தை நான் பார்க்க வேண்டாமா? ஏதோ, அஞ்சு பத்து வேண்டும் என்று கேளு அப்பப்போ கொடுக்கிறேன்... அவ்வளவுதான்... இங்கே வைத்து எல்லாம் என்னால் சமாளிக்க முடியாது... நீ உன் மாமியார் வீட்டுக்கு போயிடு.... " கொஞ்சம் கடுமையாகத்தான் பேசினார் அண்ணா....

கண் கலங்கிய சுமதிக்கு ஆறுதல் என்று கூற ஒருவரும் அங்கு இல்லை.... மாமியார் வீட்டிற்கு சென்றாள்... வந்த அன்று என்னமோ அவள் மீதும் குழந்தைகள் மீதும் பாசம் இருப்பதுபோல் இருந்த மாமியார், நாத்தனார் மெதுவாக.... " இதோ பாரு, நாங்களே உன் மாமனார் பென்ஷன்ல காலத்தை தள்ளிண்டிருக்கோம்... நீ தான் ஏதாவது வேலைக்கு போய் உங்க வாழ்க்கையை பார்த்துக்கணும்... ஒரு வாரம் வேணும்னா இங்கே இருந்துக்கோ....." தன்மையாகத் தான் பேசினா���் மாமியார் என்றாலும் , அழுந்த சொன்னது இவளுக்கு அழுகையே வந்து விட்டது....

அன்று இரவு முழுதும் கண் மூடவில்லை .... " எப்படி பிழைக்கப் போகிறோம்? இரண்டு குழந்தைகளை எப்படி வளப்பேன்? எந்த வேலை எனக்கு தெரியும்? ஆனால் இனி இங்கு இருக்க கூடாது..... 

மறுநாள் காலை.... " அம்மா! இன்னும் ஒரு வாரம் இங்கே இருக்கோம்... அதுக்குள்ளே நான் எப்படியாவது ஒரு வேலையும், தங்கறதுக்கு ஒரு இடமும் பார்த்துக்கறேன் .. " கெஞ்சுவது போல் கேட்டாள் சுமதி ... " சரி ! " என்று ஒரு வார்த்தையில் முடித்தாள் மாமியார்..... பிள்ளைகளை வீட்டின் வெளி திண்ணையில் உட்கார சொல்லிவிட்டு வெளியே சென்றாள்....

அவளது தோழி ஒரு அரசு பள்ளியில் டீச்சராய் வேலை செய்கிறாள்...அவளைப் பார்க்க சென்றாள் சுமதி ... " கவிதா... எப்படியாவது நீதான் எனக்கு உதவி செய்யணும். எனக்கு கூட்டி பெருக்கும் வேலை என்றாலும் பரவாயில்லை" பரிதாபமாய் இவள் பேசியதை கேட்ட தோழி கலங்கினாள்... சுமதி முடிக்கவில்லை.... " இப்போ புரியறது கவிதா.. நீ அப்பவே சொன்னே. மேலே படி என்று... நான் தான் கேட்கலே... பத்தாவது முடிக்க முடியலே... விட்டுட்டேன்... இப்போ? அதை விடு... " சோகத்தோடு சொன்ன சுமதியை அவள் கை பிடித்து ஆறுதல் கூறினாள் கவிதா...

" சுமதி... இங்கே பச்சிளம் குழந்தைகள் 10 -15 இருக்காங்க.. அவர்கள் வீட்டில் பார்த்துக்கொள்ள ஆள் இல்லை ஆதலால் இங்கே விடறாங்க... நீ அவர்களை பத்திரமாக பார்துப்பியா? சாப்பாடு நீதான் ஊடடனும்... சரின்னு சொன்னால் நான் சிபாரிசு செய்யறேன்.." அன்போடு கூறிய கவிதாவை அணைத்தாள் சுமதி.. இதோ, தன் குழந்தைகள் வயிறார சாப்பிட இவள் இங்கு குழந்தைகளுக்கு தாயாகிவிட்டாள்... 

கவிதா தனி விடுதியில் தங்கி இருந்தாள்... சுமதிக்காக தான் ஒரு சிறிய வீடு வாடகைக்கு எடுத்து இவளையும் குழந்தைகளையும் தன்னுடன் தங்க வைத்துக்கொண்டாள்... சுமதியின் உண்மையான உழைப்பை பெருமை படுத்தினார் பள்ளி முதல்வர்... நேரம் கிடைக்கும் பொழுது கவிதா சுமதிக்கு கொஞ்சம் பாடங்களும் சொல்லிக் கொடுத்தாள்... சிறு குழந்தைகளுக்கு டியுஷன் எடுத்தும் கொஞ்சம் சம்பாதித்தாள் சுமதி...

ஒரு வருடம் கழித்து .. " கவிதா. உனக்கு நிறைய சிரமம் கொடுத்து விட்டேன்.. தனி வீடு பார்துக்கட்டுமா? " மெதுவாக கேட்டாள் சுமதி... " உன் சௌகரியம் போல் செய்... எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை " சுருக்கமாய் பதிலளித்தாள் கவிதா.. 

வருடங்கள் ஓடின.... சுமதியின் மன உறுதியால் , உழைப்பால் , கவிதாவின் உதவியால் இன்று ஆகாஷ் ஒரு நல்ல பதவி வகிக்கிறான்... 

"ஆகாஷ்..! நான் ஒன்னு சொன்னால் தப்பா நினைக்க மாட்டியே...? இன்று நீ நல்ல பதிவிலே இருக்கே.. கை நிறைய சம்பாதிக்கிறே..! நமக்கு ஒரு குறைவும் இல்லை... உனக்கு பெண் கொடுக்க நிறையே பேர் கேட்கறா.. ஆனால், என் விருப்பம் ஒரு ஏழை பெண்ணை ஆனால் நல்ல படித்த பெண் பார்த்து நீ கல்யாணம் செய்துக்கணும்... உன் விருப்பம் என்ன சொல்லு... "

அம்மா பேசியது ஒன்றும் தப்பில்லை என்று தோன்றியது ஆகாஷிற்கு.... " அம்மா நீ உன் விருப்பம் போல் பாருமா... எங்க இரண்டு பெருக்கும் பிடித்தால் போரும் அவ்வளவுதான்... நாமே செலவு செய்து கல்யாணம் முடிக்கலாம்.." என்றான் ஆகாஷ்...

அம்மா தன்னுடன் வேலை பார்த்த மங்களம் என்பவளின் மகளை பெண் கேட்டாள்... கல்யாணம் இனிதே முடிந்தது..... ஆகாஷின் வாழ்க்கை இன்பத்தில்.... 

Read More

This article was posted in the below categories. Follow them to read similar posts.
LEAVE A COMMENT
Enter Your Email Address to Receive our Most Popular Blog of the Day