குழந்தைப் பிறந்தது. ...!
28905
8
|   Jul 02, 2017
குழந்தைப் பிறந்தது. ...!

ஒரு குழந்தை உருவாகி இவ்வுலகைப் பார்க்கும் அந்த நொடி.......! எத்தனை மகத்துவம் வாய்ந்த நேரம்... அளவில்லா சந்தோஷத்தைக் கொடுக்கும் தருணமல்லவா.....! அந்த அற்புத நேரத்தை , சந்தோஷத்தை உற்றார் உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் எல்லோருடனும் பகிர்ந்துகொள்வதில் எத்தனை இன்பம்....

அந்தக் காலத்தில் இல்லத்தில் புது உறவு / வாரிசு பிறந்தவுடனே ஊருக்கே செய்தி செல்லும். அக் காத்தில் எந்த வித தொலைத்தொடர்பும் இல்லாவிடினும் நடந்து சென்றே விஷயத்தை சொல்வதுண்டு. .. பின்பு, தொலைபேசி, லெட்டர் .

இன்று, ஒவ்வொருவரிடமும் அலைபேசி அலைந்துகொண்டிருக்கின்றது. ... அது ஈமெயில் , வாட்ஸாப்ப் , மெசேஜ் , பேஸ்-புக் என்று தொலை நுட்பம் முன்னேறி விட்ட நிலையில் தங்களின் சந்தோஷ நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளக்கூட மனம் இன்றி மௌனமாய் இருக்கின்றனர் பலர். ..

வாரிசுகள் பிறந்த விஷயத்தை யார் மூலமோ பல ஆண்டுகள் கழித்தே அறிகின்றோம். .. மனம் வேதனைப் படுகின்றது. .. ஏன் இன்று மனிதர்கள் இப்படி முற்றிலும் மாறிவிட்டனர். ... ? பண புழக்கத்தினாலா? குறுகிய மனப்பான்மையாலா? எது இவர்களை தடுக்கின்றது என்று எனக்கு விளங்கவில்லை. ...

பேஸ்புக்கில் இங்கே சென்றேன், அங்கே போட்டோ எடுத்தேன், இவரோடு உறவாடினேன், அரசியல் தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன் என்று பலவற்றை பகிர்பவர்கள் முக்கிய நிகழ்வுகளை நெருங்கிய சொந்தங்களோடும், நண்பர்களோடும் பகிர்ந்தால் என்ன ? இதில் என்ன தவறு என்று தெரியவில்லை. ..

காலம் ரொம்பவும் மாறியே விட்டது. .. மக்களின் மனம் குறுகி விட்டதுபோல் உணர்கின்றேன். ... தங்களுக்குள் ஒரு வட்டத்தைப் போட்டு அதற்குள் இருக்கவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ... அந்த வட்டம் ரொம்பவும் குறுகியதாக இருப்பதே வருத்தத்தை அளிக்கின்றது. ..

ஒவ்வொரு மனிதனும் அன்றாடம் எத்தனையோ செயல்பாடுகளில் ஈடுபடுகின்றான் எத்தனையோ சோதனைகள், வேதனைகளை வாழக்கையில் சந்திக்கின்றான் . இவற்றை எல்லாம் மீறி அவனுக்கு சந்தோஷத்தைக் கொடுப்பது மனித உறவே. .. இதில் எந்த ஐயப்பாடும் இல்லை. .. அப்படிப் பட்ட உறவுகளிடம் இன்பத்தையும், துன்பத்தையும் பகிர்ந்து கொள்வதை ஏன் மறந்துவிட்டான். ..

உறவுகளையும்,  நண்பர்களையும், நல் உள்ளங்களையும் என்றுமே நம் வாழவிலிருந்து விளக்கி வைக்க கூடாது. ... மனிதன் வாழவதற்கான அத்தாட்சியே இவர்கள்தான். .. வாழ்க்கையை துறந்துவிட்டு எப்படி வாழ்வது?   

குழந்தை உருவாவது என்பது ஒரு வரப்பிரசாதம். .. அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளத்தான் வளைகாப்பு,  சீமந்தம் என்று வைத்தனர். .. இன்று பணம் நிறைய இருப்பதால் உற்றார் உறவினர் உதவி தேவை இல்லை என்கிற மமதையில் பலர் இருக்கின்றோம். .. ஆனால் அதுவல்ல வாழ்க்கை. ... உற்றாரும்,  சுற்றாரும் சூழ வாழ இனியாவது கற்றுக்கொள்வோம். ... நமக்கென்று ஒரு வட்டம் தேவைதான். .. ஆனால் அந்த வட்டம் நம்மை கைதிபோல் ஆக்கிவிடுவதில் தான் சோகமே. .... 

வட்டத்திற்குள் வாழ்வது தவறில்லை. . ஆனால் அதில் யாரும் நுழையக்கூடாது என்பதில் தான் வருத்தம். .. நீங்களும் வெளிவராமல்,  உள்ளேயும் யாரையும் அனுமதிக்காமல் என்ன வாழ்க்கை ?  உங்கள் சுக, துக்கங்கள் மற்றவருக்கு என்ன காட்சிப் பொருளா. .. ?  அல்லவே. ..!  நாளொரு பொழுதும் ஒட்டி உறவாட இங்கு யாருக்கும் அவகாசம் இல்லை.   ஆனால்,  நல்ல விஷ���ங்களையும் , சோக விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூட நேரம் இல்லை என்று கூறுவது எந்த வகையில் நியாயம் ? 

மாற்றங்கள் அவசியம் தேவை. .. இந்நிலை மாறவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். ... சற்று சிந்தித்து செயல்படுங்கள். ..

அன்புடன்

மைதிலி ராம்ஜி

Read More

This article was posted in the below categories. Follow them to read similar posts.
LEAVE A COMMENT
Enter Your Email Address to Receive our Most Popular Blog of the Day