பெண்ணே! இழக்க வேண்டுமா??? ஏன்?
340
|   May 27, 2017
பெண்ணே!  இழக்க வேண்டுமா??? ஏன்?

நெற்றியில் போட்டு, கூந்தலில் மல்லி ...

இது... நீ பெண்ணாய் பிறந்ததற்கான அடையாளம்...

கணவன் மறைந்தால் இழக்க வேண்டுமா??? ஏன்?

                                                             --------------------

ஆம்! இது இறைவன் தந்த வரம்.... எந்நிலையிலும் நீ இதை இழக்கக்கூடாது...

பெண்களே!! நம் குலத்தினற்கு நாமே தீயது இழைக்கலாமோ???

கடந்த காலங்களை மறந்து விடுங்கள்..... அன்று , பாவம் ஒரு பெண் கணவனை இழந்தால் அவள் படும் வேதனை, மனதாலும் , உடம்பாலும், கோலத்தாலும் அப்பப்பா !!! நினைத்தாலே உடம்பு நடுங்குகிறது.... ஏதோ அந்தக் காலத்தில் செய்தனர்.... ஆனால்....

இன்று, இன்று,,, நமக்கென்று ஒரு தனித்துவம் வேண்டும்.... ஒரு பெண் தன்

பூவையும், பொட்டையும் தன்னுடன் என்றும் இணைத்து வாழ்வதால் அவளுக்கு தன்  கணவன் மீது அன்பு , பாசம் , நேசம் எல்லாம் இல்லை என்று அர்த்தம் ஆகிவிடுமா என்ன? எதற்காக அவள் கோலத்தை மாற்ற வேண்டும் என்று எனக்கு விளங்கவில்லை... ஏற்கெனவே,,, அவள் கணவனின் இழப்பால் நொந்து இருக்கும் சமயத்தில் இந்த அலங்கோலம் தேவையா??

நான் சாஸ்திர சம்ப்ரதாயம் எதிர்க்க வேண்டும் என்று பதிவு செய்ய வரவில்லை.... ஒரு பெண்ணின் பிறப்புரிமை இந்த பூவும், பொட்டும் அதை பறிக்க எவருக்கும் உரிமை இல்லை என்றுதான் பறை சாற்ற விரும்புகிறேன்.... எந்த ஒரு கணவனும் தன்  மனைவி தன் மறைவிற்கு அப்புறம் இந்த விதவை கோலத்தை விரும்ப மாட்டான்... இது சத்தியம்.... மறந்து கூட ஒரு நாள் பொட்டு நம் நெற்றியில் இல்லை என்றால் துடிக்கும் அவன்... ( கேலி அல்ல... தன் உயிருக்கான் துடிப்பு அல்ல அது ) ... அவனுக்கு தன் மனைவியின் மங்கள கோலம்தான் பிடிக்கும் என்பது உண்மை...

பெரும்பாலும் பெண்களே தான் இந்த சாஸ்திரத்திற்கு வழிவகுப்பது.... முதலில் நம் எண்ணத்தை மாற்றிக்கொண்டால் தான் உண்டு...

கணவன் பிரிந்தால் அன்று ஒரு பெண்ணிற்கு வாழ வழி இல்லை,,,, ஒன்று பிறந்த வீட்டிற்கு செல்வாள் இல்லை என்றால் மாமியார் வீட்டில் அடிமைபோல் இருப்பாள்... ஆனால், இன்று.... அவளால் தனித்து தன சொந்த காலில் நிற்க முடியும்... நிற்கவும் வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள்..அவளை வாழ விடுவோம்.... நிம்மதியாய் அவள் விரும்பும் கோலத்தில்..

உனக்கு எப்படி இருக்க விருப்பம் என நீ நினைக்கிறாயோஅப்படி இரு பெண்ணே!!! உன் விருப்பம் மாறுபட்டா இருக்கும்..... இல்லை...

உன் உரிமை நீ எடுத்துக்கோ....

மைதிலி ராம்ஜி

Read More

This article was posted in the below categories. Follow them to read similar posts.
LEAVE A COMMENT
Enter Your Email Address to Receive our Most Popular Blog of the Day