உன் சமையலறையில் ...!
755
|   May 29, 2017
உன் சமையலறையில் ...!

"சமையல் இன்று என்ன செய்வது ?? ...அனிதா மண்டையைப் போட்டு கசக்கிக்கொண்டாள்.. 

ஆஹ் !! காபி .. அனிதாவும் அவள் கணவன் வருண் இருவரும் சாப்பிட்டனர்.... "இந்தப் பசங்களை எழுப்பறதுக்குள்ளே? அப்பாடா... டைம் ஆறது...! " .நொந்துக்கொண்டே.... குளிக்க சென்றாள் அனிதா..... 

திரும்பி வந்தால் இன்னும் இவ்ரகள் எழுந்திருக்க வில்லை... "போச்சுடா...!   நீங்க கொஞ்சம் எழுப்பக்கூடாதா? " அனிதா கேள்விக்கு " இன்னும் பேப்பர் படிச்சு முடிச்சபாடில்லை.... ... " வருண் பதில் அளித்தான்... கோபத்துடன் சென்று பையனையும், பெண்ணையும் எழுப்பிவிட்டு அவர்களுக்கு காபி கொடுத்தாள்,,, 

"இப்போ???? காலை டிபன் என்ன செய்வது???? ஸ்கூல் / காலேஜ் லஞ்ச் என்ன பண்றது??? வருணிற்கு  ??? எனக்கு??? அப்பா!!!!!  தலை சுத்தறது!!!! கடிகாரம் பார்க்க பார்க்க ஏன்தான் இந்த நேரம் ஓடுகிறது என்று பல சமயங்களில் கோபம் கூட வருகிறது!!! என்ன செய்ய??? மாமியார் , மாமனார் என்று யாரும் இப்போது இல்லை... அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் முடிந்தாயிற்று....  சப்பாத்தி செய்தால் சப்ஜி செய்யணும் ஒருவருக்குப்  பிடித்தால், மற்றொருவருக்கு குர்மா தான் வேண்டும்..... "

யோசித்தாள் , யோசித்தாள் . ஒரு வழியாக... "காலை எல்லோருக்கும் தோசை , தேங்காய் சட்னி .... யார் என்ன வேண்டும் என்றாலும் சொல்லட்டும்.." மனதை திடப்படுதிக் கொண்டாள்... சில நிமிடங்கள் பரபரப்பு.... ". உம...!  அப்புறம்... சாப்பாடு சீக்கிரம் சீக்கிரம் குக்கர் வைத்தாக வேண்டும்!!! காய்கறிகள் கட் பண்ணவேண்டும்!!! யோசி யோசி... டைம் ஆகிறது!!! மூளையை கசக்கி பிழிந்தாயிற்று...

வருணிற்கு மட்டும் காலை சாப்பாடு , மதியம் தான் டிபன்... அதனால் அவருக்கு மத்யானதிற்கு தோசை மிளகாய்பொடி கொடுத்து விடலாம்... காலை அவருக்கு மோர்குழம்பு செய்து உருளைக்கிழங்கு நன்றாக ரோஸ்ட் செய்துவிடலாம் " என்று முடிவெடுத்தாள் அனிதா... ஒரு வழியாக.....  "எனக்கும், பசங்களுக்கும்  தேங்காய் சாதம், உருளைக்கிழங்கு ரோஸ்ட்...லஞ்ச்..  காய் கட் செய்யும் வேலை மிச்சம்.. கொஞ்சம் சந்தோஷம்...."  அனிதா  மனதிற்குள் பேசிக்கொண்டே   குக்கரை அடுப்பில் ஏற்றினாள்...

அது ஆவதற்குள்,,, தேங்காய் சட்னியும்,  மோர்குழம்பும் ரெடி செய்தாள்.. நடுவில் பாத்திரங்கள் ஒழித்து வேலை காரிக்கு போட்டாள், துணிகள் தோய்க்க போட்டாள் , பசங்கள் இது வேண்டும் அது இல்லை என்ற ரகளை வேறு.... நடுவில் சிறு விளக்கேற்றி பூஜை.... அவள்  சிகை அலங்காரம்.... முடிவதற்குள் குக்கர் சத்தம் வர அதை இறக்கினாள்.....  தோசை கடை ஆரம்பம்.... சூடாக முதலில் பசங்களுக்கும் முடிந்தபின் வருணிற்கு தோசை  அதில் மிளகாய்பொடிஎண்ணையுடன் தடவி வைப்பதற்குள்,,,,

தேங்காய் சாதம் மறந்து விட்டாள்.. அதை அறைத்து, வானலியில் வதக்கி குக்கர் திறந்தால் சாதத்தில் தண்ணீர் தங்கி இருந்தது... " சே..! என்னடா சோதனை "  தன்னையே திட்டிக்கொண்டாள் ... அதை வடித்து அப்படி , இப்படி முடித்து .... உடனே உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெடி ஆக. அரக்க பறக்க அதை முடித்து டப்பாக்களை தேடி தினித்து அவர்களை கிளப்பினால், வருண்  தட்டை போட்டுக்கொண்டு "ரெடி சாப்பிட ...! என்ற சிக்னல் வந்தது... ..  உடனே அந்த வேலை முடித்து தனக்கு  பாக் செய்வதற்குள் பாதி உயிர் காலி.....அனிதாவிற்கு....  முகத்தை துடைத்துக்கொண்டு ,,, புடவைக்குள் தன்னைப்  புகுத்தி வெளியில் வந்தப் பொழுது ஒரு பெரிய பாரம் இறங்கியது  போல் இருந்தது .... செய்த அத்தனை வேலையும் காற்றாய் பறந்ததுபோல் உணர்ந்தாள் ... புறப்பட்டாயிற்று அலுவலகத்திற்கு !!!!  

அலுவலகத்திலிருந்து திரும்பியவுடன்,, மறுபடியும் காபி, ஹோர்லிக்ஸ் .... பிறகு ஒருவருக்கு சாப்பாடு , மற்றவர்க்கு டிபன்..... போச்சுடா???? இது என்று முடியும்.... தொடர்கதைதான்....  அவள் ஒரு தொடர் கதை அல்ல...சமையல் ஒரு தொடர்கதை.....  

- மைதிலி ராம்ஜி

Read More

This article was posted in the below categories. Follow them to read similar posts.
LEAVE A COMMENT
Enter Your Email Address to Receive our Most Popular Blog of the Day