உயர்த்த பட வேண்டியது கல்வி தரத்தை அல்ல கல்வியை அணுகும் முறையே
2375
1293
|   Jul 13, 2017
உயர்த்த பட வேண்டியது கல்வி தரத்தை அல்ல கல்வியை அணுகும் முறையே

சமீபத்தில் நீட் தேர்வுக்காக பல போராட்டங்கள் நடந்தேறின மேலும் அதுவே செய்தி தொலைக்கட்சியில் விவாத மேடைகளுக்கு தலைப்பாக மாறிவிட்டது.அந்த கலந்துரையாடலில் பலர் முன் வைத்த ஒன்று கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கருத்து.இதே நீட்டை வைத்து தனியார் பள்ளிகள் மக்களிடையே “தன் பள்ளியில் சேர்ந்தால் குழந்தைகள் ஆறாம் வகுப்பு முதலே அந்த தேர்வுக்காக தயார் செய்வதாக விளம்பரம் செய்தது” இது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

அண்மையில் நடந்த சம்பவம்.என் மகளுக்கு சரியாக எழுது கோளை கூட பிடிக்க தெரியாத வயது , அவளின் பள்ளியிலிருந்து ஒரு ஸ்க்ராப் புக்கை என்னிடம் அளித்தார் அவளது ஆசிரியை.முதல் பக்கத்தில் “குடும்ப புகைப்படத்தை ஓட்ட வேண்டும்” அடுத்த பக்கத்தில் அழகான வண்ண காகிதாங்களால் ஆன ஒரு பூ ஓட்ட பட்டிருந்தது.அதற்க்கு மேல் அக்டிவிட்டி 1 என்று எழுத பட்டிருந்தது.இதை போல் மற்ற குழந்தைகளின் பெற்றோருக்கும் அளிக்கப்பட்டது அனைவரின் முகத்திலும் ஒரு புன்னகை ஆனால் எனக்கு எந்த வித மகிழ்ச்சியும் இல்லை.வீட்டிற்கு வந்து சேர்ந்தால் என் மைத்துனர் மகன்(ஏழு வயது) ஓ என்று அழுது கொண்டிருந்தான் என்ன என்று கேட்டால் அவன் எனக்கு அவன் வகுப்பு பணி புத்தகத்தை காட்டினான் அதில் அவன் ஆசிரியை(தமிழ்) “கை எழுத்து மிக மோசம்” என்று எழுதி இருந்தார்.அதிர்ந்து போனேன்.

     அன்று இரவு முழுவதும் இவ்விரு சம்பவத்தை எண்ணிக்கொண்டிருந்தேன்.முதல் சம்பவத்திற்கும் இரண்டாம் சம்பவத்திற்கும் உள்ள ஒற்றுமை ஒன்று.என்ன என்று பார்த்தல் “கல்வி என்பது எதிலும் பெர்பெக்ட் என்பதை நோக்கிய பயணம்” இன்று மட்டும் இல்லை நாம் படிக்கும் காலத்திலும் இதை நோக்கியே இருந்தது.

     முதல் சம்பவத்தில் எனக்கு ஏன் மற்ற பெற்றோர்களை போல அந்த பூவை பார்த்து என் முகத்தில் ஒரு மலர்ச்சியும் இல்லையே என்று மனதில் ஒரு கனம் இருந்தது.நான் ஒரு சராசரியான அம்மா இல்லையா என்று கூட எனக்கு தோன்றி விட்டது.சட்டென்று என் மகள் கையில் சிகப்பு,மஞ்சள்,நீலம் கிரயான்சில் கிறுக்கிய ஒரு காகிதத்தை காட்டினால் அதை பார்த்து அவளை இருக்க கட்டி அணைத்து ஒரு முத்தத்தை அளித்த நிமிடம் என்னுள் இருந்த பாரம் கரைந்தது.

     என் மைத்துனர் மகனை அன்று நாங்கள் எப்படி சமாதானம் செய்வதென்றே எங்களுக்கு விளங்கவில்லை அதற்குக் கரணம் அக்குழந்தை எழுப்பிய வினா “ஏன் உன் டீச்சர் இப்படி எழுதிருகாங்க” என்று அவருடைய அம்மா கேட்டார்.”நாற்பது நிமிடம் வகுப்பில் அனைத்தையும் எழுத வேண்டும் அப்பொழுது எப்படி பொறுமையாகவும்,அழகாகவும் எழுத முடியும்?” என்றான். இதை கேட்டவுடன் நாங்கள் அனைவரும் வாயடைதுப் போனோம்.

     இப்பதிவை சில ஆசிரியர்களும் படிக்க நேரும் தயவு செய்து மாணவர்களை எப்படி கையாள்வது என்று மனதில் ஒரு வரையறை வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் அதற்க்கான யுக்தியையும் மேலும் அதை காலத்திற்கேற்ப அவ்வபோது மேன்படுத்துங்கள் இதுவே இந்த சமூகத்துக்கு நல்ல மனிதர்களை,தலைவர்களை,பொறியாளர்,மருத்துவர்,கலை செல்வங்களை மற்றும் பல சொத்துக்களை அளிக்க உதவும்.

அதே போல் பெற்றோர்களும் குழந்தையின் கல்வியை முழுக்க பள்ளி,ஆசிரியர்,டியூஷன் ஆசிரியரிடம் அவுட்சோர்ஸ் செய்யாமல் நீங்களும் அவர்களின் அனைத்து முயற்சிகளையும் ரசித்து டியூன் செய்து,அதரவு அளித்து,வெற்றி தோல்விகளில் பங்கெடுங்கள்.

     நம் பாட்டனர்கள் பொறியியல் நிபுணர்கள் இல்லை ஆனால் வீட்டில் உள்ள மின்விசிறி பழுதடைன்தலோ,கார்ரியர்ல் பிஉஸ்(fuse) போனாலோ அதை அவர்களே சரி செய்வதை நாம் நேராக பார்த்து வியந்துள்ளோம்.ஆனால் இப்பொழுது நம்மில் எவ்வளவு பேர் வீட்டில் உள்ள குழாயில் சிறிய அடைப்பை சரி செய்வதற்காக நம் கைபேசியில் உள்ள ஆப்பில் ப்ளம்பரை அழைத்து பார்க்கிறோம் சற்று யோசியுங்கள்.

     என் அம்மா சிறு வயதில் எனக்கொரு கதை கூறியது இப்பொழுது எனக்கு நியாபகம் வருகிறது.

ஒரு ஊரில் வேலையில்லாத ஒருவன் நதிக் கரையில் அமர்ந்திருந்தான்.அப்பொழுது அவனை கண்ட ஒரு மீனவர் அவனிடம் வினவியபோது அவரிடம் தனக்குப் பசிக்கிறது சாப்பிட எதாவது அளிக்கும் படி வேண்டினான்.அதற்கு அவர் சிரிது நேரம் யோசித்து தன் தூண்டிலை அவனிடம் அளித்து மீன் பிடிக்கவும் கற்றுக்கொடுத்தார்.

இதைக் கண்ட மற்றொரு மீனவர் அவரிடம் “அவன் உன்னிடம் கேட்டது ஒரு வேளை சாப்பாடு அதற்க்கு போய் பல ரூபாய் மதிப்புள்ள உன் தூண்டிலை கொடுத்து விட்டாயே?” என்றார்.”என்னால் இந்த வேளைக்கான உணவை அளித்து விட முடியும் பின்னால் ஒவ்வொரு நாளும் அவன் இன்னொருவர் அண்டியே அவன் வாழ்க்கையை கழிக்க வேண்டும்.நான் இப்பொழுது அவனுக்கு செய்த உதவியால் அவன் வாழ்நாள் முழுவதும் யாரிடமும் எந்த உதவிக்காகவும் காத்திற்க வேண்டியதில்லை.

     ஆகையால் கல்வி என்பது ஒரு அடித்தளமே அதை குழந்தைகளுக்கு அளிக்கும் நாம் அதை அவர்களுக்கு ஒரு பளுவாக மாற்றி விடக்கூடாது.

Read More

This article was posted in the below categories. Follow them to read similar posts.
LEAVE A COMMENT
Enter Your Email Address to Receive our Most Popular Blog of the Day